மரபுச் சொற்கள்

ஒலி மரபுச் சொற்கள்

  • குரங்கு அலப்பும்

  • புலி உறுமும்

  • குயில் கூவும்

  • யானை பிளிறும்

  • ஆடு கத்தும்

  • ஆந்தை அலறும்

  • சிங்கம் கர்ச்சிக்கும், முழங்கும்

  • மயில் அகவும்

  • நாய் குரைக்கும்

  • பாம்பு சீறும்


விலங்குகளின் இளமைப்பெயர் மரபுச் சொற்கள்

  • ஆட்டுக் குட்டி

  • யானைக் கன்று

  • கோழிக் குஞ்சு

  • சிங்கக் குருளை

  • குதிரைக் குட்டி

  • புலிப் பறழ்

  • குரங்குக் குட்டி

  • கீரிப் பிள்ளை

  • மான் கன்று

  • அணிற்பிள்ளை


வினைமரபுச் சொற்கள்

(ஒரு எழுவாய், ஒரு பயனிலையை கொண்டு முடிவது வினைமரபு)

  • அம்பு எய்தார்

  • சோறு உண்டான்

  • ஆடை நெய்தார்

  • கூடை முடைந்தார்

  • பூ பறித்தாள்

  • சுவர் எழுப்பினார்

  • மாத்திரை விழுங்கினான்

  • முறுக்கு தின்றாள்

  • நீர் குடித்தான்

  • பால் பருகினான்


தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள்

  • மா, பலா, வாழை – இலை

  • ஈச்சம், தென்னை, பனை – ஓலை

  • கம்பு, கேழ்வரகு, சோளம் – தட்டை

  • நெல், புல், தினை – தாள்

  • அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி – பிஞ்சு


பூச்சிகள், பறவைகள், விலங்குகள் – இருப்பிட மரபுச் சொற்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்