சுட்டெழுத்துக்கள்
சுட்டெழுத்துக்கள் என்றால் என்ன?
👉 சுட்டிக்காட்ட உதவும் எழுத்துக்கள் தான் சுட்டெழுத்துக்கள்.
சுட்டெழுத்துக்கள் – மூன்று
-
அ
-
இ
-
உ
எடுத்துக்காட்டுகள்:
-
அவன்
-
இவள்
-
உது
-
அந்த பையன்
-
அப்பையன்
-
இவ்வீடு
-
அந்தப்பக்கம்
-
இந்தவீடு
கவனிக்க:
"உ" என்னும் எழுத்தை இப்பொழுது பயன்படுத்துவதில்லை.
சான்றுகள்: உதுக்கண் (சற்று தூரத்தில் பார்), உப்பக்கம் (முதுகுப்பக்கம்), உம்பர் (மேலே).
சுட்டெழுத்து சான்றுகள்
1. அகச்சுட்டு
👉 அகம் என்றால் உள்ளே என்று பொருள்.
👉 அ, இ, உ சொல்லின் உள்ளே நின்று சுட்டுப் பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
👉 சுட்டெழுத்தை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தராது.
சான்று:
-
அவன்
-
இவர்
-ுவர்
2. புறச்சுட்டு
👉 அ, இ, உ சொல்லின் புறத்தே நின்று சுட்டுப் பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.
👉 சுட்டெழுத்தை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும்.
சான்று:
-
அவ்வீடு
-
இப்பையன்
-
உக்குதிரை
3. அண்மைச்சுட்டு – “இ”
👉 அண்மை என்றால் பக்கத்தில் என்று பொருள்.
👉 அருகிலுள்ளதைச் சுட்டிக்காட்ட உதவுவது அண்மைச்சுட்டு எனப்படும்.
சான்று:
-
இவன்
-
இவ்வீடு
-
இக்குதிரை
4. சேய்மைச்சுட்டு – “அ”
👉 சேய்மை என்றால் தொலைவில் (தூரத்தில்) என்று பொருள்.
👉 தொலைவில் உள்ளதைச் சுட்டிக்காட்ட உதவுவது சேய்மைச்சுட்டு எனப்படும்.
சான்று:
-
அவன்
-
அவ்வீடு
-
அக்குதிரை
5. சுட்டுத்திரிபு
👉 திரிபு என்றால் மாற்றம் என்று பொருள்.
👉 அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகள் → அந்த, இந்த, உந்த என்று மாற்றம் அடையும்.
சான்று:
-
அந்த வீடு
-
இந்தப் பையன்
-
உந்த மரம்
📌 முடிவு
சுட்டெழுத்துக்கள் –
-
அகச்சுட்டு
-
புறச்சுட்டு
-
அண்மைச்சுட்டு
-
சேய்மைச்சுட்டு
-
சுட்டுத்திரிபு
என ஐந்து வகைப்படும்.
0 கருத்துகள்
உங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.