விடை வகைகள்
விடை
வினாக்களுக்குத் தக்கவாறு கூறப்படும் விடை
உதாரணம்
கபிலா, நீ பாடுவாயா?
👉 ‘நீயே பாடு’
நீ படித்தாயா?
👉 தலைவலித்தது
விடை வகைகள்
விடை 8 வகைப்படும்:
-
சுட்டு விடை
-
மறை விடை
-
நேர் விடை
-
ஏவல் விடை
-
வினா எதிர் வினாதல் விடை
-
உற்றது உரைத்தல் விடை
-
உறுவது கூறல் விடை
-
இனமொழி விடை
1) சுட்டு விடை
ஒன்றைக் கருதி அல்லது சுட்டிக்காட்டிச் சொல்லும் விடை சுட்டுவிடை எனப்படும்.
உதாரணம்:
கடைத்தெரு எங்கு உள்ளது?
👉 வலப்பக்கத்தில் உள்ளது
2) மறைவிடை
வினாவிற்கு எதிர்மறையாகக் கூறும் விடை மறைவிடை எனப்படும்.
இங்கு "மறை" என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.
உதாரணம்:
தம்பி, விளையாடினாயா?
👉 விளையாடவில்லை
3) நேர்விடை
வினாவிற்கு உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை எனப்படும்.
உதாரணம்:
தம்பி, விளையாடினாயா?
👉 விளையாடினேன்
4) ஏவல்விடை
வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வது ஏவல்விடை எனப்படும்.
உதாரணம்:
நீ செய்வாயா?
👉 நீயே செய்
5) வினா எதிர் வினாதல் விடை
வினவப்பட்ட வினாவிற்கு விடையாக வினாவாகவே விடை அளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.
உதாரணம்:
கபிலா, நீ பாடுவாயா?
👉 நான் பாடாமல் இருப்பேனா?
6) உற்றது உரைத்தல் விடை
வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.
இது இறந்த காலம் / நிகழ்காலம் குறிக்கும்.
உதாரணம்:
நீ படித்தாயா?
👉 தலைவலித்தது
7) உறுவது கூறல் விடை
வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நிகழ உள்ளதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.
இது எதிர்கால வினை கொண்டு முடியும்.
உதாரணம்:
நீ படிப்பாயா?
👉 தலைவலிக்கும்
8) இனமொழி விடை
ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்.
உதாரணம்:
துவரம் பருப்பு உள்ளதா?
👉 கடலைப் பருப்பு உள்ளது
📚 கூடுதல் தகவல்கள்
✨ விடை வகைகள் முக்கியத்துவம்
தமிழ் இலக்கணத்தில் வினா–விடை முறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
-
மாணவர்களுக்கு எளிய புரிதல் கிடைக்கிறது.
-
போட்டித் தேர்வுகளில் (TNPSC, TRB, TET, UPSC) அதிகம் கேட்கப்படும் பகுதிகளில் ஒன்று.
-
அன்றாட உரையாடல்களிலும் இயல்பாகவே பயன்படுத்தப்படுகிறது.
📝 பயன்பாடு
-
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலக்கணப் பயிற்சி.
-
ஆசிரியர்களுக்கு கற்றுத்தர reference.
-
தேர்வு தயாரிப்பாளர்களுக்கு சிறந்த குறிப்புகள்.
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
Q1: மொத்தம் எத்தனை வகை விடைகள் உள்ளன?
👉 8 வகை விடைகள் உள்ளன.
Q2: ‘மறைவிடை’ மற்றும் ‘நேர்விடை’ வித்தியாசம் என்ன?
👉 மறைவிடை எதிர்மறை பதில். நேர்விடை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் பதில்.
Q3: இனமொழி விடை எப்போது பயன்படுத்தப்படுகிறது?
👉 ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறும்போது.
📌 தொடர்புடைய பதிவுகள்
0 கருத்துகள்
உங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.