TNPSC பொதுத் தமிழ்: உவமைத் தொடர்களும் அவற்றின் பொருள்களும் - முழுமையான விளக்கம்



தமிழ் தகுதி மற்றும்

மதிப்பீட்டுத் தேர்வு

 

 


                                             

 

TNPSC NEW SYLLABUS

 

  

வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் உவமைத் தொடரின் பொருளறிதல்

 

 

உவமைத் தொடர்கள்: விளக்கமும் உதாரணமும்

உவமைத் தொடர்

பொருள்

எடுத்துக்காட்டு வாக்கியம்

மடை திறந்த வெள்ளம் போல்

தடையின்றி மிகுதியாக

திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல

வெளிப்படைத் தன்மை

பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

 

பொருத்துக :

1.   காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல     – எளிதில் மனதில் பதிதல் 

2.   கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல         – பயனற்ற செயல்

3.   பசுமரத்து ஆணி போல                          – ஒற்றுமையின்மை

4.   விழலுக்கு இறைத்த நீர் போல                      – எதிர்பாரா நிகழ்வு

5.   நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல   – தற்செயல் நிகழ்வு

 

 

இங்கே கேட்கப்பட்ட உவமைகளும் அவற்றின் சரியான பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1.   காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல    தற்செயல் நிகழ்வு

2.   கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல         எதிர்பாரா நிகழ்வு

3.   பசுமரத்து ஆணி போல                          எளிதில் மனதில் பதிதல்

4.   விழலுக்கு இறைத்த நீர் போல                   பயனற்ற செயல்

5.   நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல ஒற்றுமையின்மை

 

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைத்தல்

 

உவமைத் தொடர்

வாக்கியத்தில் பயன்பாடு

குன்றின் மேலிட்ட விளக்கைப் போல

குன்றின் மேலிட்ட விளக்கைப்போல திருக்குறளின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது.

வேலியே பயிரை மேய்ந்தது போல

வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களைத் துன்புறுத்துகின்றனர்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு அப்பா புத்தாடையும், மாமா மிதிவண்டியும் வாங்கித் தந்தது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது.

உடலும் உயிரும் போல

உடலும் உயிரும் போல கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் நட்புடன் திகழ்ந்தனர்.

கிணற்றுத் தவளை போல

கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.

இலக்கிய உவமை விளக்கம்

“காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” - உவமை உணர்த்தும் கருத்து யாது?

  • உவமை: நெற்பயிர் வளர்ந்து கதிர் விட்டு, நெல்மணிகள் உருவாவதற்கு முன்பே போதிய மழையின்றி வாடிப் போதல்.
  • பொருள்: நெற்பயிர் வளர்ந்து கதிரை ஈன்று நெல்மணிகளைக் காணும் முன்னரே மழைத்துளி இல்லாமல் காய்ந்துவிட்டது போல என்பது உவமை.

திருமுழுக்கு யோவான், கானகத்தில் தன்தாயார் எலிசபெத் அம்மாளுடன் வாழ்ந்த சூழலில் அவருடைய தாயார் இறந்து விட்டார். எனவே, நெற்பயிர் கதிரை ஈன்று நெல்மணிகள் முற்றுவதற்கு முன்னால் மழையின்றிப் பட்டுப் போனதைப் போல, திருமுழுக்கு யோவான் வளர்ந்து பெரிய மனிதராகி இச்சமுதாயத்திற்கு நற்பலன்களை வழங்குவதற்கு முன்னரே அவருடைய தாய் எலிசபெத் இறந்து போனது, நெற்பயிர் காய்ந்தது என்ற உவமைக்குக் கருத்தாக அமைகிறது.

உவமை தொடர்களும் அதன் பொருள்களும்:

எண்

உவமைத் தொடர்

பொருள்

பயன்பாடு (வாக்கியம்)

1

அடியற்ற மரம் போல

அடியற்ற – வேரில்லாத

பெரும்துன்பம். கணவன் இறந்த செய்திக் கேட்ட கண்ணகி அடியற்ற மரம் போலச் சாய்ந்தாள்.

2

அனலில் இட்ட மெழுகு போல

அனலில் – நெருப்பில்

துடிதுடித்தல். பால் காய்ச்சும் போது தவறுதலாக கையில் ஊற்றிக் கொண்ட கவிதா, அனலில் இட்ட மெழுகு போல வலியால் துடித்தாள்.

3

இலைமறை காய் போல

இலைமறை – இலையின் மறைவில்

மறைமுகமாக. திரைப்படத்தில் ஒரு சில மர்மங்களை இயக்குனர் இலைமறை காய் போல காட்டியிருந்தார்.

4

எலியும் பூனையும் போல

எலியும் பூனையும்

எதிரிகளாக. ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

5

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல

ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பிள்ளைகள்

உடன் பிறந்தவர்களாக. ராமுவும் அவன் நண்பர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் பழகி வந்தார்கள்.

6

கண்ணினைக் காக்கும் இமை போல

கண்களைக் காப்பாற்றும் இமைகள்

அக்கறையாக. தாய் தன் குழந்தையை கண்ணினைக் காக்கும் இமை போலப் பார்த்துக் கொண்டாள்.

7

கரை காணாக் கப்பல் போல

கரையை காணாமல் நடுக்கடலில் தவிக்கும் கப்பல்

தவிப்பு. கூட்டத்தில் தன் தாயை பிரிந்த குழந்தை, கரை காணாக் கப்பல் போல தவிதவித்தது.

8

கலங்கரை விளக்கம் போல

கப்பலுக்கு வழிக் காட்டும் வெளிச்சம்

வழிகாட்டுதல். ஆசிரியர் தேவன் பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையானவற்றையும் கற்றுக் கொடுப்பதால், மாணவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல திகழ்ந்தார்.

9

கன்றினைக் கண்ட பசு போல

கன்றுக்குட்டியை கண்ட தாய்ப்பசு

சேயை கண்டு தாய் அடையும் மகிழ்ச்சி. கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை மீண்டும் பார்த்தவுடன், மீனாட்சி கன்றினைக் கண்ட பசு போல ஓடிச் சென்று தழுவினாள்.

10

காட்டுத்தீ போல

காட்டில் பிடித்த தீ

வேகமாகப் பரவுதல். சில நேரங்களில், உண்மையை விட வதந்திகள் காட்டுத்தீ போலப் பரவுவதை நாம் உணர முடியும்.

11

கிணற்றுத் தவளை போல

கிணற்றுக்குள் வாழும் தவளை

வெளி உலகம் தெரியாமல் இருப்பது. மல்லிகா படித்திருந்தாலும், கிணற்றுத் தவளை போல அறியாமையுடன் இருந்தாள்.

12

தூண்டிலில் மாட்டிய மீன் போல

தூண்டிலில் சிக்கிக் கொண்ட மீன்

துடிதுடிப்பு. கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்ட சிறுமி மீனா, தூண்டிலில் மாட்டிய மீன் போலத் துடித்தாள்.

13

அத்தி பூத்தாற்போல்

அத்திப்பூ பூத்தது

அரிதாக. ராமு படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய பின், தொலைக்காட்சி பார்ப்பது அத்தி பூத்தாற் போல் ஆகிவிட்டது.

14

உடும்புப்பிடி போல்

உடும்பு சுவற்றை பிடித்திருப்பது

கெட்டியாக. மாறன் தன் கொள்கைகளை உடும்புப்பிடி போல பற்றிக் கொண்டிருந்தான்.

15

குடத்தில் இட்ட விளக்குப் போல

குடத்துக்குள் ஏற்றிய விளக்கு

திறமையை வெளிக்காட்டாமல் வாய்ப்புக் கிடைக்காததால், அமரனின் ஓவியத் திறமை குடத்தில் இட்ட விளக்கு போல இருந்தது.

16

சிறகு ஒடிந்த பறவை போல

இறக்கைகளை இழந்த பறவை

செயலற்றுப் போகுதல். மனைவியை இழந்த குமரன் சிறகு ஒடிந்த பறவை போல ஆனான்.

17

ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு போல

யானையின் வாய்க்குள் போன கரும்பு

நசுங்கிப் போதல். கரும்பு ஆலையில் இயந்திரத்திற்குள் விடப்பட்ட கரும்பு ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு போல சக்கையானது.

18

கப்பல் கவிழ்ந்தாற் போல

கப்பல் தண்ணீருக்குள் மூழ்கினால்

சோகம். பாரதி, மதிப்பெண்கள் குறைந்ததற்கு, ஏதோ கப்பல் கவிழ்ந்தாற் போல் சோகமாக இருந்தாள்.

19

கனியிருக்கக் காயை விரும்புவது போல

இனிப்பான கனிகள் இருக்கும்போது கசப்பான காயை விரும்புவது

நல்லது இருக்க, கெட்டதை நோக்கி செல்வது. பேசுவதற்கு பல இனிய சொற்கள் இருக்கும்போது தீய சொற்களை பயன்படுத்துவது கனியிருக்கக் காயை விரும்புவது போல என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

20

கீரியும் பாம்பும் போல

கீரிப்பிள்ளையும் பாம்பும்

சண்டை. கவியும் ரதியும், கீரியும் பாம்பும் போல எப்போதும் சண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள்.

21

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

மலையின் மேல் ஏற்றி வைத்த விளக்கு

அனைவரும் அறிதல். கர்ணனின் கொடையுள்ளம் குன்றின் மேலிட்ட விளக்கு போல அனைவரது உள்ளத்திலும் பிரகாசித்தது.

22

சுடச் சுடரும் பொன் போல

நெருப்பில் சுடச் சுட பொன் மிளிரும்

அனுபவத்தால் தேர்ந்தவர் ஆதல். சுடச் சுடரும் பொன் போல, வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன.

23

சூரியனைக் கண்ட பனி போல

சூரியனைக் கண்ட பனித்துளி

துன்பம் விலகுதல். சூரியனைக் கண்ட பனி போல துன்பமெல்லாம் விலகுதல் வேண்டும் என்று மாதவி கடவுளை வணங்கினாள்.

24

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல

சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளி

சொல்வதையே திருப்பித் திருப்பிச் சொல்லுதல். சிறுபிள்ளைகள் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல அவர்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்.

25

நீர்மேல் எழுத்துப் போல

தண்ணீர் மேல் எழுதும் எழுத்து

நிரந்தரமற்ற வார்த்தைகளை குறிப்பிடுதல். குடிகாரனின் வாக்கு நீர்மேல் எழுத்து போல, சொன்ன மாத்திரமே நீர்த்துப் போகும்.

26

பசுமரத்தாணி போல

பச்சை மரத்தில் ஆணியால் எழுதுவது

நிரந்தரமாய் நினைவில் இருத்தல். பசுமரத்தாணி போல சிறுவயதில் மனதில் பதிந்த நிகழ்வுகள் ஒருவரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்.

27

பார்க்காததைப் பார்த்தது போல

பார்க்காததைப் பார்த்தது

மலைப்பு. அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே வந்த தந்தையை ஏதோ பார்க்காததைப் பார்த்தது போலப் பார்த்து நின்றான் சரவணன்.

28

மழை பெய்து ஓய்ந்தது போல

கனமழைக்குப் பின் மழை ஓய்ந்தது

பெரிய இரைச்சலுக்குப் பின் அமைதி நிலவுதல். திருமண வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தினரும் சென்ற பின், அந்த இடம் மழை பெய்து ஓய்ந்தது போலக் காணப்பட்டது.

29

அடுத்தது காட்டும் பளிங்கு போல

தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு

உள்ளத்தில் இருப்பதை முகம் காட்டிக் கொடுத்து விடுவது. தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனதில் நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

30

தவளை தன் வாயால் கெட்டது போல

தவளை வாயால் சத்தமிடுவதால் எதிரி அதன் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுதல்

பேசியே ஆபத்தில் மாட்டிக் கொள்ளுதல். தவளை தன் வாயால் கெட்டது போல இரு திருடர்களும் திருடிய பொருளை எங்கு மறைத்து வைப்பது என்று விவாதித்ததை காவலர் கேட்டதால் அவர்களை கைது செய்தார்.

31

நீறு பூத்த நெருப்புப் போல

சாம்பல் மறைத்து இருக்கும் நெருப்பு

ஏற்கனவே இருந்த பிரச்சினை திடீரென்று வெடிப்பது. போரட்டத்தில் ஏற்கனவே, நீறு பூத்த நெருப்பு போல இருந்த கோரிக்கைகள், கனன்று, எரியத் துவங்கின.

32

வெறுங்கையில் முழம் போடுவது போல

கையில் பொருள் ஏதும் இல்லாமல் அளப்பது

கையில் பொருள் இல்லாமல் செயலைத் திட்டமிடுவது. மழை இன்றி இவ்வுலகின் நீர் ஆதாரங்களை செழிக்க வைப்பது வெறுங்கையில் முழம் போடுவது போல ஆகும்.

33

இரும்பை இழுக்கும் காந்தம் போல

காந்தத்தால் கவரப்படும் இரும்பு

ஈர்ப்பு. இரும்பை இழுக்கும் காந்தம் போல எறும்புகளை ஈர்த்தன இனிப்புப் பலகாரங்கள்.

34

எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் தூண்டிவிடுவதாய் எண்ணெய் ஊற்றுதல்

பிரச்சினையைப் பெரிதாக்குதல். பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, சிலர் வன்முறையில் இறங்கியதால், எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல போராட்டம் தீவிரமடைந்தது.

35

தாயைக் கண்ட சேயைப் போல

சேய் - குழந்தை

மகிழ்ச்சி. சேகர் தன் குடும்பத்தைக் கண்டவுடன் தாயைக் கண்ட சேயைப் போல மகிழ்ந்தான்.

36

நகமும் சதையும் போல

நகமும் நகத்தை ஒட்டி இருக்கும் சதையும்

நெருக்கம். கலாவும் சீதாவும், நகமும் சதையும் போல இணை பிரியாத தோழிகளாக இருந்தார்கள்.

37

நுனிப்புல் மேய்ந்தாற்போல

புல்லின் நுனி

மேலோட்டமாக. ரவி, நுனிப்புல் மேய்ந்தாற்போல படித்ததால் அவனால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளிக்க இயலவில்லை.

38

பல் பிடுங்கின பாம்பு போல

பல் பிடுங்கப்பட்ட பாம்பு

செயலற்ற தன்மை. பெரிய கொள்ளைக்காரனான சேது, கைது செய்யப்பட்டவுடன் பல் பிடுங்கின பாம்பு போல ஆனான்.

39

பழமரம் நாடிய பறவை போல

பழங்கள் நிறைய இருக்கும் மரத்தை தேடி செல்லும் பறவை

பொருள் இருக்கும் இடத்தைத் தேடி செல்வது. குணாளன் செல்வந்தராக ஆனபோது அவருடைய பழைய நண்பர்கள் அனைவரும் பழமரம் நாடிய பறவை போல வந்து சேர்ந்தனர்.

40

பாம்புக்குப் பால் வார்த்தாற்போல

பாம்புக்குப் பாலைக் கொடுப்பது

நல்லது செய்பவருக்கே தீங்கு விளைவிப்பது. கந்தன், திருடனுக்கு வேலை கொடுத்து பாம்புக்குப் பால் வார்த்தாற்போல் பணமும் கொடுத்தார். ஆனால் திருடனோ கையில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

41

புலியைக் கண்ட மான் போல

புலியைக் கண்ட மான்

மிரட்சி, பயந்து ஓடுதல். காவலரைக் கண்ட திருடன் புலியைக் கண்ட மான் போல பயந்து ஓடினான்.

42

பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல

நாறில் கட்டப்படும் பூவினால் நாறும் சேர்ந்து மணம் பெறுவது

நல்லவர்களுடன் சேர்ந்து நன்மை அடைவது. நல்லவர்களுடன் பழகினால் பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல நாமும் நன்மை அடையலாம்.

43

முகத்தில் அடித்தாற்போல

முகத்தில் அடித்தல் - அவமானப் படுத்துதல்

அவமானம். ரவி தன் நண்பனைப் பார்க்க வந்த போது, நண்பனின் மனைவி முகத்தில் அடித்தாற்போல பேசி அனுப்பினாள்.

44

வெயிலில் இட்ட புழு போல

சூடு தாங்காமல் துடிக்கும் புழு

துடிப்பது. கையில் காய்ச்சின பாலை ஊற்றிக்கொண்ட மாலதி வெயிலில் இட்ட புழு போல துடித்தாள்.

45

கல்லில் நார் உரித்தாற்போல

கல்லில் இருந்து நார் எடுப்பது

பொய்யாகக் கதை சொல்வது. மாலன் தான் செய்த தவறை மறைக்க கல்லில் நார் உரித்தாற்போல பல கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டான்.

46

தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினாற்போல

தூங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது

அமைதியாக இருப்பவரை தூண்டிவிடுவது. அடிமைப் பட்டு கிடந்த மக்களின் உள்ளத்தில் புரட்சியை விதைத்தன பாரதிதாசனின் கவிதைகள்.

47

பசுத்தோல் போர்த்திய புலி போல

பசுவின் தோலைக் கொண்டு மூடியிருக்கும் புலி

சாதுவாக நடிப்பது. பரம சாதுவான பாலன் சண்டையில் மூர்க்கமாக நடந்த போதுதான், அவன் பசுத்தோல் போர்த்திய

புலி போல என்பது தெரியவந்தது.

48

மீகாமன் இல்லா மரக்கலம் போல

கப்பலை வழிநடத்துபவர் இல்லாத கப்பல்

வழிகாட்டுதல் இல்லாமல் தவித்தல். கணவன் இறந்த பின் கமலாவின் குடும்பம் மீகாமன் இல்லா மரக்கலம் போல தவித்தது.

49

அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல

நிதானமாக போடவேண்டிய கோலத்தை அவசரமாக அள்ளித் தெளிப்பது

நிதானமாகச் செய்யவேண்டிய செயலை அவசரமாக செய்வது. இக்காலத் திருமண விழா காலை மட்டும் அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல என ஆகி இருக்கிறது.

50

அடிவயிற்றில் நெருப்பைக் கட்டினாற்போல

அடிவயிற்றில் நெருப்பைக் கட்டுவது

பயம். இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சென்ற ரமாவிற்கு அடிவயிற்றில் நெருப்பைக் கட்டினாற்போல இருந்தது.

51

இடி ஓசை கேட்ட நாகம் போல

நாகம் - பாம்பு

சீற்றம். அவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளைக் கேட்ட ராமன், இடி ஓசை கேட்ட நாகம் போல சீறினான்.

52

ஏறவிட்டு ஏணியைப் பிடுங்கினாற்போல

இறங்குவதற்கு ஏணி கொடுக்காமல் இருப்பது

பாதியில் தவிக்க விடுவது. பூனையை பக்கத்து ஊரில் விட்டு வந்த சுந்தரத்தின் செயல் ஏறவிட்டு ஏணியைப் பிடுங்கினாற்போல இருந்தது.

53

காதும் காதும் வைத்தாற்போல

காதும் காதும் வைப்பது

ஒருவருக்கும் தெரியாமல். திருடிய பொருட்களை கொள்ளையர்கள் காதும் காதும் வைத்தாற்போல மறைத்து வைத்தார்கள்.

54

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல

பழம் நழுவிப் பாலில் விழுவது

செய்ய வேண்டிய செயல் சுலபமாக நிறைவேறுவது. அதிகாரி வீட்டிலேயே திருட வந்த திருடனைப் பார்த்த அதிகாரிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல இருந்தது.

55

போர் முனையிலே ஆயுதம் தேடுதல் போல

போர் முனையிலே ஆயுதம் தேடுதல்

குறிப்பிட்ட பொருட்கள் நிறைய இருக்கும் இடத்திலேயே அப்பொருளைத் தேடுதல். மருத்துவர் அதற்கான மருந்தினை மருத்துவமனையில் தேடியது போர் முனையிலே ஆயுதம் தேடுதல் போல இருந்தது.

56

முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்தாற்போல

முழுமையான பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைப்பது

மிகப் பெரிய செயலை மறைப்பது. பூரணி, தான் வேலை இழந்த செய்தியை பெற்றோரிடம் மறைத்தது முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்தாற்போல இருந்தது.

57

வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தாற்போல

கடா - விலங்கினத்தின் ஆண்பால்

நன்றி மறத்தல். செல்வம், தனது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தான். இது வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தாற்போல அமைந்தது.

58

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது

நாசூக்காக. நண்பன் வீட்டிற்கு சென்ற குமார், தனக்கு பசிக்கிறது என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல உணர்த்தினான்.

59

விழலுக்கிறைத்த நீர் போல

விழல் - தேவையற்ற புல்

தேவையற்ற. நவீன் படிப்பதற்காக அவனது தந்தை செய்த செலவுகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீர் போல ஆனது.

60

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது

துன்பத்தில் இருக்கும் போது இன்னும் துன்பம் கொடுப்பது. வானதிக்கு கடன்காரர்களின் தொல்லை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல இருந்தது.

61

அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழந்தாற்போல

புதிதாய் ஒன்று செய்யத் துவங்கி இருப்பதையும் இழப்பது

இருப்பதையும் இழப்பது. சண்டையைச் சமாதானம் செய்யச் சென்ற சுந்தரம், அவர்களின் நட்பை இழந்து திரும்பினார்.

62

ஆகாயத்தில் கட்டிய கோட்டை போல

ஆகாயம் - வானம்; கோட்டை - பெரிய கட்டிடம்

முடியாத ஒன்றைக் கற்பனைச் செய்தல். மல்லிகா தான் முதல் மதிப்பெண் வாங்குவதாக ஆகாயத்தில் கட்டிய கோட்டை போல கற்பனை செய்தாள்.

63

கண்ணில்லார் பெற்றிழந்தாற்போல

கண் இல்லாதவர் பெற்று இழப்பது

தற்காலிக இன்பம். இரத்தினம் குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பணம் திருடு போனது கண்ணில்லார் பெற்றிழந்தாற்போல ஆனது.

64

நவில்தொறும் நூல்நயம் போல

நூலின் பொருள் கற்கும் போது இன்பம் சேர்த்தல்

பழக பழக இன்பம் தருவது. பண்புடையாளர்களின் நட்பு நவில்தொறும் நூல்நயம் போல, பழகப் பழக இன்பம் தரக்கூடியது.

 

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் (TNPSC OLD QUESTIONS)

1. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல (10-12-2023 TNPSC)

(A) தற்செயல் நிகழ்வு

(B) எதிர்பாரா நிகழ்வு

(C) வெளிப்படைத் தன்மை

(D) ஒற்றுமையின்மை

விடை: (D) ஒற்றுமையின்மை


2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல (10-12-2023 TNPSC)

(A) தற்செயல் நிகழ்வு

(B) எதிர்பாரா நிகழ்வு

(C) பயனற்ற செயல்

(D) ஒற்றுமையின்மை

விடை: (B) எதிர்பாரா நிகழ்வு

 

3. மடைதிறந்த வெள்ளம் போல (10-12-2023 TNPSC)

(A) ஒற்றுமையின்மை

(B) தடையின்றி மிகுதியாக

(C) வெளிப்படைத்தன்மை

(D) ஒற்றுமை

விடை: (B) தடையின்றி மிகுதியாக

 

4. மழை முகம் காணாப் பயிர் போல (09-12-2023 TNPSC)

(A) மழைக் குறைவு

(B) வெளிப்படைத் தன்மை

(C) எதிர்பாரா நிகழ்வு

(D) வாடியிருத்தல்

விடை: (D) வாடியிருத்தல்

 

5. விழலுக்கு இறைத்த நீர் போல (09-12-2023 TNPSC)

(A) எதிர்பாராத நிகழ்வு

(B) தற்செயல் நிகழ்வு

(C) ஒற்றுமையின்மை

(D) பயனற்ற நிகழ்வு

விடை: (D) பயனற்ற நிகழ்வு

 

6. வேலியே பயிரை மேய்ந்தது போல (05-12-2023 TNPSC)

(A) எதிர்பாரா நிகழ்வு

(B) அறியாமை

(C) கடமை தவறுதல்

(D) பற்றாக்குறை

விடை: (C) கடமை தவறுதல்

 

7. பசு மரத்து ஆணி போல (05-12-2023 TNPSC)

(A) பயனற்ற செயல்

(B) தற்செயல் நிகழ்வு

(C) எளிதில் மனத்தில் பதிதல்

(D) எதிர்பாரா நிகழ்வு

விடை: (C) எளிதில் மனத்தில் பதிதல்

 

8. “கிணற்றுத் தவளை போல” உவமை கூறும் பொருள் தெளிக. (05-12-2023 TNPSC)

(A) சுயநலம்

(B) ஞானம்

(C) அறிவு

(D) அறியாமை

விடை: (D) அறியமை

 

9. “விழலுக்கு இறைத்த நீர் போல” என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்? (05-10-2023 TNPSC)

(A) ஒற்றுமையின்மை

(B) தற்செயல் நிகழ்வு

(C) எதிர்பாரா நிகழ்வு

(D) பயனற்ற செயல்

விடை: (D) பயனற்ற செயல்

 

10. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல (05-10-2023 TNPSC)

(A) ஒற்றுமையின்மை

(B) பயனற்ற செயல்

(C) தற்செயல் நிகழ்வு

(D) எதிர்பாரா நிகழ்வு

விடை: (A) ஒற்றுமையின்மை


11. ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’ – உவமை கூறும் பொருள் தெளிக. (05-10-2023 TNPSC)

(A) கடமை தவறுதல்

(B) கடமை

(C) பொறுப்புணர்வு

(D) வெறுப்பு

விடை: (A) கடமை தவறுதல்

 

12. “நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல” (09-09-2023 TNPSC)

(A) பயனற்ற செயல்

(B) ஒற்றுமையின்மை

(C) தற்செயல் நிகழ்வு

(D) வெளிப்படைத் தன்மை

விடை: (B) ஒற்றுமையின்மை

 

13. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – இந்த உவமையின் பொருளைத் தேர்க. (09-09-2023 TNPSC)

(A) தற்செயல் நிகழ்வு

(B) தடையின்றி மிகுதியாக

(C) அவசரகுடுக்கை

(D) எதிர்பாரா நிகழ்வு

விடை: (D) எதிர்பாரா நிகழ்வு

 

14. விழலுக்கு இறைத்த நீர் போல (18-08-2023 TNPSC)

(A) ஒற்றுமையின்மை

(B) பயனற்ற செயல்

(C) தற்செயல் நிகழ்வு

(D) எதிர்பாரா நிகழ்வு

விடை: (B) பயனற்ற செயல்

 

15. திருவிழாவைக் காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர். (18-08-2023 TNPSC)

(A) தடையின்றி மிகுதியாக

(B) வெளிப்படைத்தன்மை

(C) பயனற்ற செயல்

(D) எதிர்பாரா நிகழ்வு

விடை: (A) தடையின்றி மிகுதியாக

 

16. ‘தாமரை இலை நீர் போல’ - உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (27-05-2023 TNPSC)

(A) சேர்ந்திருத்தல்

(B) பட்டும் படாமல் இருத்தல்

(C) ஒட்டியிருத்தல்

(D) பிரிந்திருத்தல்

விடை: (B) பட்டும் படாமல் இருத்தல்

 

17. பேரறிவாளன் திரு போல எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (27-05-2023 TNPSC)

(A) பலருக்கு பயன்படும்

(B) சிலருக்கு பயன்படும்

(C) தனக்கு பயன்படும்

(D) யாருக்கும் பயன்படாது

விடை: (A) பலருக்கு பயன்படும்

 

18. சரியான இணையைக் கண்டறிக: (27-05-2023 TNPSC)

(A) இலவு காத்த கிளி போல               – ஏமாற்றம்

(B) இடியோசை கேட்ட நாகம்போல         – விரைவு

(C) குன்றின் மேலிட்ட விளக்கு போல      – வேதனை

(D) அடுத்தது காட்டும் பளிங்கு போல       – சேர்ந்திருத்தல்

விடை: (A) இலவு காத்த கிளி போல – ஏமாற்றம்

 

19. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்? (23-07-2023 TNPSC)

(A) வெளிப்படைத் தன்மை

(B) எளிதில் மனதில் பதிதல்

(C) தற்செயல் நிகழ்வு

(D) பயனற்ற செயல்

விடை: (A) வெளிப்படைத் தன்மை

 

20. ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல’ என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது? (23-07-2023 TNPSC)

(A) ஒற்றுமையின்மை

(B) தற்செயல் நிகழ்வு

(C) பயனற்ற செயல்

(D) எதிர்பாரா நிகழ்வு

விடை: (B) தற்செயல் நிகழ்வு

 

21. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல – உவமையின் பொருளைத் தேர்க. (23-07-2023 TNPSC)

(A) தடையின்றி மிகுதியாக

(B) எண்ணி செயல்படாமை

(C) ஒற்றுமையின்மை

(D) தற்செயல் நிகழ்வு

விடை: (C) ஒற்றுமையின்மை

 

22. “மழை முகம் காணாப் பயிர் போல” - உவமைத் தொடர் விளக்கும் பொருளைத் தேர்ந்தெழுது. (01-07-2023 TNPSC)

(A) வருந்துதல்

(B) அழுதல்

(C) அச்சப்படுதல்

(D) சிரித்தல்

விடை: (A) வருந்துதல்

 

23. “பசு மரத்து ஆணி போல” (01-07-2023 TNPSC)

(A) தெளிவாகத் தெரியும்

(B) எளிதில் மரத்தில் பதியும்

(C) எளிதில் மனதில் பதியாது

(D) எளிதில் மனதில் பதியும்

விடை: (D) எளிதில் மனதில் பதியும்

 

24. ‘தாமரை இலை நீர் போல’ - உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (27-05-2023 TNPSC)

(A) சேர்ந்திருத்தல்

(B) பட்டும் படாமல் இருத்தல்

(C) ஒட்டியிருத்தல்

(D) பிரிந்திருத்தல்

விடை: (B) பட்டும் படாமல் இருத்தல்

 

25. பேரறிவாளன் திரு போல எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (27-05-2023 TNPSC)

(A) பலருக்கு பயன்படும்

(B) சிலருக்கு பயன்படும்

(C) தனக்கு பயன்படும்

(D) யாருக்கும் பயன்படாது

விடை: (A) பலருக்கு பயன்படும்


26. சரியான இணையைக் கண்டறிக: (27-05-2023 TNPSC)

(A) இலவு காத்த கிளி போல               – ஏமாற்றம்

(B) இடியோசை கேட்ட நாகம்போல         – விரைவு

(C) குன்றின் மேலிட்ட விளக்கு போல      – வேதனை

(D) அடுத்தது காட்டும் பளிங்கு போல       – சேர்ந்திருத்தல்

விடை: (A) இலவு காத்த கிளி போல – ஏமாற்றம்

 

27. ‘பசு மரத்து ஆணி போல’ - உவமை கூறும் பொருள் தெளிக. (20-05-2023 TNPSC)

(A) எதிர்பாரா நிகழ்வு

(B) எளிதில் மனத்தில் பதிதல்

(C) பயனற்ற செயல்

(D) ஒற்றுமையின்மை

விடை: (B) எளிதில் மனத்தில் பதிதல்

 

28. ‘மடை திறந்த வெள்ளம் போல்’ – உவமை கூறும் பொருள் தெளிக. (20-05-2023 TNPSC)

(A) பலவாக

(B) குறைவாக

(C) தடையின்றி மிகுதியாக

(D) மிகுதியாக

விடை: (C) தடையின்றி மிகுதியாக


29. அவசரக்குடுக்கை என்ற உவமையின் பொருளை எழுதுக. (13-05-2023 TNPSC)

(A) விரைந்து வெளியேறுதல்

(B) இயலாத செயல்

(C) எண்ணி செயல்படாமை

(D) நீண்டகாலமாக இருப்பது

விடை: (C) எண்ணி செயல்படாமை

 

30. “காக்கை உட்காரப் பணம்பழம் விழுந்தது போல” (13-05-2023 TNPSC)

(A) வெளிப்படைத் தன்மை

(B) பயனற்ற செயல்

(C) ஒற்றுமையின்மை

(D) தற்செயல் நிகழ்வு

விடை: (D) தற்செயல் நிகழ்வு

 

31. ‘பசுமரத்து ஆணி போல’ என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது? (13-05-2023 TNPSC)

(A) பயனற்ற செயல்

(B) தற்செயல் நிகழ்வு

(C) எதிர்பாரா நிகழ்வு

(D) எளிதில் மனதில் பதிதல்

விடை: (D) எளிதில் மனதில் பதிதல்

 

32. கிணற்றுத் தவளை போல (07-05-2023 TNPSC)

(A) ஒற்றுமையின்மை

(B) தற்செயல் நிகழ்வு

(C) அறியாமை நிகழ்வு

(D) எதிர்பாராத நிகழ்வு

விடை: (C) அறியாமை நிகழ்வு

 

33. ‘விழலுக்கு இறைத்த நீர் போல’ என்ற உவமைக்கு ஏற்றப் பொருள் தருக. (07-05-2023 TNPSC)

(A) ஒற்றுமையின்மை

(B) வெளிப்படைத்தன்மை

(C) பயனற்ற செயல்

(D) எதிர்பாரா செயல்

விடை: (C) பயனற்ற செயல்

 

34. பசுமரத்து ஆணி போல – உவமையின் பொருளைத் தேர்க. (07-05-2023 TNPSC)

(A) தடையின்றி மிகுதியாக

(B) அவசர குடுக்கை

(C) தற்செயல் நிகழ்வு

(D) எளிதில் மனத்தில் பதிதல்

விடை: (D) எளிதில் மனத்தில் பதிதல்

 

35. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல (01-04-2023 TNPSC)

(A) எதிர்பாரா நிகழ்வு

(B) தற்செயல் நிகழ்வு

(C) ஒற்றுமையின்மை

(D) பயனற்ற செயல்

விடை: (B) தற்செயல் நிகழ்வு

 

36. ‘விழலுக்கு இறைத்த நீர் போல’ - உவமை கூறும் பொருள் தெளிக. (01-04-2023 TNPSC)

(A) பயனற்ற செயல்

(B) எதிர்பாராத செயல்

(C) தற்செயல் நிகழ்வு

(D) வெளிப்படைத் தன்மை

விடை: (A) பயனற்ற செயல்

 

37. பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும். (01-04-2023 TNPSC)

(A) வெளிப்படைத் தன்மை

(B) தடையின்றி மிகுதியாக

(C) ஒற்றுமையின்மை

(D) பயனற்ற செயல்

விடை: (A) வெளிப்படைத் தன்மை

 

38. ‘கிணற்றுத் தவளை போல’ - உவமை கூறும் பொருள் தெளிக. (15-03-2023 TNPSC)

(A) தெளிவு

(B) அறிவுடைமை

(C) உலக அறிவின்மை

(D) தெளிவின்மை

விடை: (C) உலக அறிவின்மை

 

39. ‘விழலுக்கு இறைத்த நீர் போல’ – உவமை கூறும் பொருத்தமான பொருளைத் தேர்க. (15-03-2023 TNPSC)

(A) பயனின்மை

(B) இல்லாதிருத்தல்

(C) பயனடைதல்

(D) மறைந்துபோதல்

விடை: (A) பயனின்மை

 

40. துஞ்சுபுலி இடறிய சிதடன் போல .... உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (14-03-2023 TNPSC)

(A) துணிதல்

(B) அறிதல்

(C) அறியாமை

(D) ஆணவம்

விடை: (C) அறியாமை

 

41. பசுமரத்து ஆணி போல (14-03-2023 TNPSC)

(A) எதிர்பாராத நிகழ்வு

(B) தற்செயல் நிகழ்வு

(C) பயனற்ற செயல்

(D) எளிதில் மனத்தில் பதிதல்

விடை: (D) எளிதில் மனத்தில் பதிதல்


42. “உடலும் உயிரும் போல” – உவமை கூறும் பொருள் தெளிக. (10-03-2023 TNPSC)

(A) வேற்றுமை

(B) நட்பு

(C) ஒற்றுமை

(D) பகைமை

விடை: (C) ஒற்றுமை

 

43. “அத்தி பூத்தது போல” - உவமை கூறும் பொருள் தெளிக. (10-03-2023 TNPSC)

(A) மிக எளிதாக

(B) மிக அரிதாக

(C) மிக உயரமாக

(D) மிக குள்ளமாக

விடை: (B) மிக அரிதாக

 

44. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல். ‘எடுப்பார் கைப்பிள்ளை’ (10-03-2023 TNPSC)

(A) கைக்குழந்தையின் செயல்பாடுகள்

(B) யார் எதை சொன்னாலும் கேட்பது

(C) இளமைப்பருவத்து நினைவுகள்

(D) குழந்தைப்பருவத்தின் உணவு பழக்கவழக்கங்கள்

விடை: (B) யார் எதை சொன்னாலும் கேட்பது

 

45. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல (13-02-2023 TNPSC)

(A) ஒற்றுமையின்மை

(B) பயனற்ற செயல்

(C) தற்செயல் நிகழ்வு

(D) எதிர்பாரா நிகழ்வு

விடை: (A) ஒற்றுமையின்மை

 

46. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல (13-02-2023 TNPSC)

(A) பயனற்ற செயல்

(B) எதிர்பாரா நிகழ்வு

(C) தற்செயல் நிகழ்வு

(D) ஒற்றுமையின்மை

விடை: (B) எதிர்பாரா நிகழ்வு

 

47. “உள்ளங்கை நெல்லிக்கனி போல” – உவமை கூறும் பொருள் தெளிக. (08-02-2023 TNPSC)

(A) தெளிவு

(B) கடினம்

(C) ஐயம்

(D) கவனம்

விடை: (A) தெளிவு

 

48. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் உடலும் உயிரும் போல (08-02-2023 TNPSC)

(A) வேற்றுமை

(B) ஒற்றுமை

(C) நம்பிக்கை

(D) உண்மை

விடை: (B) ஒற்றுமை

 

49. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் ‘தாமரை இலை நீர் போல’ (08-02-2023 TNPSC)

(A) தாமரை இலை மேல் நீர் ஒட்டாது

(B) பாதுகாப்பின்றி அலைதல்

(C) செல்வத்துடன் வாழ்தல்

(D) ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்

விடை: (D) ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்

 

50. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல (07-02-2023 TNPSC)

(A) எதிர்பாரா நிகழ்வு

(B) தற்செயல் நிகழ்வு

(C) ஒற்றுமையின்மை

(D) பயனற்ற செயல்

விடை: (B) தற்செயல் நிகழ்வு


51. ‘விழலுக்கு இறைத்த நீர் போல’ - உவமை கூறும் பொருள் தெளிக. (07-02-2023 TNPSC)

(A) பயனற்ற செயல்

(B) எதிர்பாராத செயல்

(C) தற்செயல் நிகழ்வு

(D) வெளிப்படைத் தன்மை

விடை: (A) பயனற்ற செயல்

 

52. பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும். (07-02-2023 TNPSC)

(A) வெளிப்படைத் தன்மை

(B) தடையின்றி மிகுதியாக

(C) ஒற்றுமையின்மை

(D) பயனற்ற செயல்

விடை: (A) வெளிப்படைத் தன்மை

 

53. எம்.ஜி.ஆர். திரைத்துறையில் “கொடிக் கட்டிப் பறந்தார்” – உவமையின் பொருளை எழுதுக. (29-01-2023 TNPSC)

(A) நீண்ட காலமாக இருப்பது

(B) புகழ்பெற்று விளங்குதல்

(C) எண்ணி செயல்படாமை

(D) விரைந்து வெளியேறுதல்

விடை: (B) புகழ்பெற்று விளங்குதல்


54. இரட்டை கிளவி போல் .... உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (29-01-2023 TNPSC)

(A) வளமை

(B) வறுமை

(C) வேற்றுமை

(D) ஒற்றுமை

விடை: (D) ஒற்றுமை

 

55. பொருந்தா இணையைக் கண்டறிக. (29-01-2023 TNPSC)

(A) உள்ளங்கை நெல்லிக்கனிபோல    – தெளிவு

(B) நகமும் சதையும் போல           – நட்பு

(C) நீர் மேல் எழுத்து போல           – நிலையின்மை

(D) மழைமுகம் காணாப் பயிர்போல   – உவகை

விடை: (D) மழைமுகம் காணாப் பயிர்போல – உவகை (ஏனெனில் இதன் பொருள் துன்பம்)

 

56. பொருத்துக. (29-01-2023 TNPSC)

(a) ஊமை கண்ட கனவு போல             – 1. நட்பு

(b) உடுக்கை இழந்தவன் கை போல        – 2. கொடை

(c) வரையா மரபின் மாரி போல            – 3. அடக்கம்

(d) ஒருமையுள் ஆமை போல              – 4. தவிப்பு

விடை: (C) 4 1 2 3


57. “மழை முகம் காணாப் பயிர் போல” உவமைக்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2023 Group 3A)

(A) செழிப்பு                – இன்பம்

(B) வறட்சி வாட்டம்       – துன்பம்

(C) மகிழ்ச்சி               – மிகுந்த இன்பம்

(D) மழை                  – வெயில்

விடை: (B) வறட்சி வாட்டம் – துன்பம்

 

58. “பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல” இவ்வுவமைக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2023 Group 3A)

(A) எதிர்பார்த்த ஒன்று எதிர்பாராமல் நடக்காதிருத்தல்

(B) நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது

(C) பயனுள்ள நன்மை நடக்காதிருத்தல்

(D) பயனற்ற செயல், பயனற்ற நன்மை

விடை: (B) நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது

 


📝 உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! (Share Your Thoughts!)

உவமைத் தொடர்கள் பற்றி நாம் விரிவாகக் கற்ற இந்தப் பதிவு உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது? அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் உவமைகள் பேச்சிற்குத் தரும் அழகு, தெளிவு மற்றும் ஆழம் உங்களுக்கு எவ்வாறு தோன்றியது? 

 

 உங்கள் கருத்துகள், விளக்கங்கள் மற்றும் புதிய எடுத்துக்காட்டுகள் 👉 இந்தக் கட்டுரையை இன்னும் செழுமையாக்கும். அதனால் தயங்காமல் Comment பகுதியில் பகிருங்கள்.

💬 நீங்கள் விரும்பினால் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கலாம்:

🔹 இந்தப் பதிவில் நாம் பார்த்த உவமைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? (எ.கா: பசுமரத்தாணி போல , மடைதிறந்த வெள்ளம் போல ) அதில் உங்களை ஈர்த்த சிறப்பு என்ன?

🔹 உள்ளங்கை நெல்லிக்கனி போல மற்றும் இலைமறை காய் போல - இந்த இரண்டு உவமைகளில் எது ஒரு செய்தியைச் சொல்லும்போது அதிக வலு சேர்க்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்?

 🔹 இந்தப் பதிவில் குறிப்பிடப்படாத, உங்கள் பகுதியில் புழக்கத்தில் இருக்கும் புதிய உவமைத் தொடர் ஒன்றை நீங்கள் அறிவீர்களா? அதை எளிய விளக்கத்துடன் இங்கே பகிர முடியுமா?

🔹 இன்றைய பேச்சு வழக்கில் அல்லது திரைப்படப் பாடல்களில் நீங்கள் கவனித்த ஒரு உவமைத் தொடரை உதாரணமாகக் கூறுங்கள்.


🔥 தொடர்ந்து இணைந்திருங்கள்! (Keep Connected!)

டிஎன்பிஎஸ்சி (TNPSC) பொதுத்தமிழ் பாடத்திட்டத்தின் நுணுக்கங்களையும், தமிழ் இலக்கணத்தின் அழகையும் 👉 இன்னும் பலரிடம் கொண்டு செல்லும் இந்தப் பயணத்தில் தமிழ்க்கல்விச் சுடர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த அறிவுப் பயணத்தில் நீங்களும் ஒரு ஒளிச்சுடராக இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம் ❤️

📢 தமிழ் இலக்கணச் சுடரொளியை எங்கும் பரப்ப…

YouTube

  • 📘 தமிழ் இலக்கணப் பாடங்கள்

  • 📖 உவமைத் தொடர்கள் – தெளிவான விளக்கங்கள் 

  • 🎥 TNPSC & School Exam காணொளிகள் 👉 தமிழ்க்கல்விச் சுடர் YouTube சேனலை Subscribe செய்யுங்கள்! 

Instagram / Threads

  • 📌 தினமும் ஒரு இலக்கணக் குறிப்பு

  • 📌 அழகிய உவமைகள் & பொருள்கள் 

  • 📌 டிஎன்பிஎஸ்சி முந்தைய ஆண்டு வினாக்கள் 👉 Follow செய்ய மறக்காதீர்கள்!

Facebook / WhatsApp

  • 📰 தமிழ் இலக்கியச் செய்திகள்

  • ⚡ உடனுக்குடன் கல்விச் சார்ந்த தகவல்கள் 👉 எங்களைப் பின்தொடருங்கள்! 

Blogger (வலைப்பதிவு)

  • 📚 உவமைத் தொடர்கள், இலக்கணத் தேர்வுகள் போன்ற விரிவான கட்டுரைகள் 

  • ✍️ ஆழமான விளக்கங்கள் & பயிற்சிகள் 👉 தமிழ்க்கல்விச் சுடர் Blogger-க்கு தொடர்ந்து வருகை தாருங்கள்!

💖 நீங்கள் இல்லையேல் தமிழ்க்கல்விச் சுடர் இல்லை!

✍️  தமிழ்க்கல்விச் சுடர்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்